சினிமா

'காடுன்னு ஒன்னு இருந்தா' - வெளியானது 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லர்

'காடுன்னு ஒன்னு இருந்தா' - வெளியானது 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லர்

ச. முத்துகிருஷ்ணன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் 'பத்தல பத்தல' அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை கமலே பாடி, எழுதியும் இருந்தார். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 'விக்ரம்' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. “காடுனு ஒன்னு இருந்தா” என்று கமல் பேசும் வசனத்தோடு ஆரம்பிக்கும் ட்ரெய்லர் ஆக்‌ஷன் காட்சிகளில் நிரம்பியிருக்கிறது. ட்ரெய்லரை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.