சினிமா

புதுக்கோட்டை: தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவக்கம்

புதுக்கோட்டை: தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவக்கம்

sharpana

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கியது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் தொடங்கியது. அதில், தனுஷுக்கும் நித்யா மேனனுக்குமான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுகிறது. தனுஷ் டெலிவரி பாயாக நடிக்கும் காட்சிகளும் கல்லூரி காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டுள்ளது.