சினிமா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிறப்பு நாணயம் இன்று வெளியீடு

webteam

கர்நாடக சங்கீத இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் இன்று வெளியிடப்படுகிறது.

கர்நாடக சங்கீத இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்து 100 ஆண்டுகள் ஆகிறது. நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. சுப்புலட்சுமி படத்துடன் 100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்படுகிறது. மத்திய கலாச்சார துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு நாணயங்களை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.