சினிமா

'ஏ ராசா’.... விஜய் சேதுபதி - யுவனின் ‘மாமனிதன்’ இரண்டாம் பாடல் நாளை வெளியீடு!

'ஏ ராசா’.... விஜய் சேதுபதி - யுவனின் ‘மாமனிதன்’ இரண்டாம் பாடல் நாளை வெளியீடு!

sharpana

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘மாமனிதன்’ படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இப்படத்திற்கு சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


சமீபத்தில் இப்படத்தில் இளையராஜா குரலில் ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக் கதவை’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நாளை 11.30 மணிக்கு இரண்டாம் பாடலான ‘ஏ ராசா’ வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Second single from Maamanithan Releasing Tomorrow [ Friday 28 ] at 11.30 A.M. <a href="https://twitter.com/hashtag/YeRasa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#YeRasa</a> <a href="https://t.co/CsDp8CyqJU">pic.twitter.com/CsDp8CyqJU</a></p>&mdash; Raja yuvan (@thisisysr) <a href="https://twitter.com/thisisysr/status/1397855979169976320?ref_src=twsrc%5Etfw">May 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>