’பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ’சாஹோ’.
இதில் ஸ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் , ஜாக்கி ஷெராஃப் உட்பட பலர் நடிக்கின்றனர். சுஜீத் இயக்கும் இந்தப் படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார்.
யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நடிக்க முதலில் இந்தியா நடிகை அலியா பட்டிடம்தான் பேசினார். அவர் மறுத்ததால் ஸ்ரத்தா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தப் படத்தை மறுத்தது ஏன் என்று அலியா பட்டிடம் கேட்கப்பட்டது.
அவர் கேரக்டர் சிறியதாக இருந்ததால் நடிக்கவில்லையாம். ஹீரோ கேரக்டருக்கு சமமாக ஹீரோயின் கேரக்டர் இல்லை என்பதாலும் முக்கியத்துவம் இல்லை என்றதாலும் அவர் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.