துருக்கி படப்பிடிப்பு பிரச்னை நிறைவடைந்ததாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் உள்ளிட்டோரின் நடிப்பில், இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் துருவநட்சத்திரம். இதன் படப்பிடிப்புக்காக ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் சென்ற படக்குழுவினர் துருக்கி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், படப்பிடிப்பு உபகரணங்களுடன் என்ன செய்வதென தெரியாமல் அங்கிருப்பதாகவும் இயக்குநர் கவுதம் மேனன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அங்குள்ளவர்களின் உதவியால் பிரச்னை நிறைவடைந்து விட்டதாகவும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும் கவுதம் தெரிவித்திருக்கிறார்.