சினிமா

நடிகைகளை காக்க புதிய சங்கம் : வரலட்சுமி தகவல்

நடிகைகளை காக்க புதிய சங்கம் : வரலட்சுமி தகவல்

webteam

நடிகைகளின் பாதுகாப்புக்காகப் புதிய சங்கம் தொடங்கப்படும் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகைகளின் பாதுகாப்புக்காகச் சென்னையில் மார்ச் 8ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று நடிகை வரலட்சுமி, புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்தார். அவர் கூறும்போது, ’பெண்கள், நடிகைகள் பாதுகாப்பு தொடர்பாக மார்ச் 8ல் புதிய அமைப்பு தொடங்கப்படும். பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல்களைத் தடுக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடைபெறும்’ என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக, நடிகை பாவனா கேரளாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.