துரந்தர் 2 - மோடி web
சினிமா

துரந்தர் 2 படத்தில் பிரதமர் மோடி.. முதல் பாகத்தில் மோடிக்காக வைக்கப்பட்ட வசனம்..?

துரந்தர் 2 திரைப்படத்தில் பிரதமர் மோடி பதவியேற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

துரந்தர் 2 படத்தில் பிரதமர் மோடி பிரதமர் பதவியை ஏற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பாகத்தில் மாதவன் ஒரு வசனத்தை கூறியபோது, மோடி இரண்டாம் பாகத்தில் இடம்பெறுவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இப்போது, மோடி துரந்தர் 2-ல் இருப்பது உறுதியாகியுள்ளது.

ரன்வீர் சிங், அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கி டிசம்பர் 5-அம் தேதி வெளியான படம் `துரந்தர்'. பாகிஸ்தான் தீவிரவாத குழுவுக்குச் செல்லும் ஓர் இந்திய உளவாளியின் சாகசங்கள் என்ற பெயரில் கற்பனையும், சில வரலாற்று நிஜ சம்பவங்களையும் இணைத்துப் படத்தை உருவாக்கி இருந்தனர். திரையரங்கில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வசூலிலும் 1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Dhurandhar

இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' இன்று வெளியாகியிருக்கும் நிலையில், துரந்தர் 2 படத்தில் பிரதமர் மோடி பிரதமர் பதவியை ஏற்கும் காட்சியும், பணமதிப்பிழப்பு செய்யும் காட்சியும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dhurandhar madhavan

துரந்தர் முதல் பாகத்தின் போது ஒரு காட்சியில் மாதவன் கதாபாத்திரம் ‘நமக்கு சப்போர்ட் பன்ற அரசாங்கம் வேணும் சார் என்று சொல்லும்போது, எப்போதாவது நாட்டை பற்றி கவலைப்படும் ஒரு அரசியல் தலைவர் வருவார்’ என்று சொல்வது போல வசனம் இடம்பெற்றிருக்கும். அப்போதே இரண்டாம் பாகத்தில் மோடி இடம்பெறுவாரோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்தசூழலில் பிரதமர் மோடி துரந்தர் 2 திரைப்படத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது.