jailer 2  jailer 2
சினிமா

ரூ.600 கோடி வசூலை கடந்து ஜெயிலர் 2 படைக்கப்போகும் சாதனை.. ரஜினியின் சினிமா உச்சம்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் வசூல்வேட்டை நடத்திவருகிறது.

Rishan Vengai

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' உலகளாவிய வசூலில் 600 கோடியை நெருங்கி, பல பிளாக்பஸ்டர் படங்களின் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறது. 7 நாட்களில் இந்தியாவில் 317.20 கோடி நிகர வசூலையும், வெளிநாடுகளில் 211 கோடியையும் எட்டியுள்ள இப்படம், தமிழ் சினிமாவின் வரலாற்று மைல்கல்லாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தனது வலுவான ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்துவருகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கிய இந்த காமெடி-ஆக்ஷன் திரைப்படம், அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பார்வையாளர்களை ஈர்த்தது. வெறும் ஏழு நாட்களில் உலகளாவிய வசூல் 600 கோடி ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், இப்படம் ஏற்கனவே 'ஹனுமான் அன்ஷ்' படத்தின் வாழ்நாள் வசூலைக் கடந்துவிட்டதுடன், தற்போது ஜெயிலர் பாகம் 1 உட்பட பல பெரிய பிளாக்பஸ்டர் படங்களின் வசூலையும் முறியடிக்க காத்திருக்கிறது.

jailer 2

7 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை பொறுத்தவரையில், Sacnilk.com தகவலின்படி, 'ஜெயிலர் 2' திரைப்படம் இந்தியாவில் 14,470 காட்சிகளில், 7-வது நாளில் நிகர வசூலாக ரூ. 28.15 கோடியை வசூலித்துள்ளது. இப்படத்தின் மொத்த உள்நாட்டு நிகர வசூல் ரூ. 317.20 கோடியை எட்டியுள்ளது, அதே சமயம் அதன் இந்திய மொத்த வசூல் ரூ. 371.45 கோடியாக உள்ளது. அதன் மொத்த வெளிநாட்டு வசூல் ரூ.211 கோடியாக இருக்கும் நிலையில், உலகளாவிய மொத்த வசூல ரூ.582.45 கோடியாக ரூ.600 கோடியை நெருங்கியுள்ளது.

ஜெயிலர் 2 திரைப்படம் விரைவில் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற வரலாற்று மைல்கல்லையும், 700 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற மைல்கல்லையும் எட்டவிருக்கிறது. IMDB-ன் படி உலகளவில் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களில் முதலிடத்தில் ரஜினியின் 2.0 படம் 660 கோடியுடனும், விஜயின் லியோ திரைப்படம் 615 கோடியுடனும் முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளன. விரைவில் இந்த இரண்டு ரெக்கார்டையும் ஜெயிலர் 2 முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.