சினிமா

'சிங்கப்பெண்ணே' பிகில் பாடலா ? ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்

'சிங்கப்பெண்ணே' பிகில் பாடலா ? ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்

webteam

பிகில் படத்தின் பாடல் என 'சிங்கப்பெண்ணே' எனத் தொடங்கும் பாட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய படங்களுக்குப் பின் இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்தப்படத்தில் நயன்தாரா,  நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் பிகில் படத்தின் பாடல் என 'சிங்கப்பெண்ணே' எனத் தொடங்கும் பாட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
.  அந்த பாடலை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். பிகில் படக்குழு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் 'சிங்கப்பெண்ணே' பாடல் வைரலாகி வருகிறது. #Singapenne என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது