சினிமா

’பீஸ்ட்’ நான்காம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவக்கம்

’பீஸ்ட்’ நான்காம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவக்கம்

sharpana

விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஐந்து நாட்களுக்குமுன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில், இன்று முதல் நான்காம் கட்ட படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தொடங்கியுள்ளது படக்குழு. இதை முடித்துக்கொண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டெல்லி செல்கின்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் படக்குழுவினர் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்றும், நவம்பர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.