விடாமுயற்சி x
சினிமா

’இருங்க பாய்..’ மீம் கன்டெட்டை பாடலில் வைத்த அனிருத்! வைப் மெட்டீரியலாக ரிலீஸான விடாமுயற்சி பாடல்!

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியானது.

Rishan Vengai

நடிகர் அஜித்குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

மீகாமன், தடையறத்தாக்க, தடம், கலகத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி, க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுப்பதில் பெயர்போனவர் என்பதால் ’விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில் எதாவது அப்டேட் விடுங்கப்பா என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, இயக்குநர் பிலிம் மேக்கிங்கிற்கு உரியவகையிலே வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிளாக சவாதீகா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

’இருங்க பாய்’ மீம் கன்டன்ட் உடன் வெளிவந்த முதல் பாடல்!

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில் ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் முதல் சிங்கிள் பாடலுக்கான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

வெளியாகியிருக்கும் அப்டேட்டின் படி, சவாதீகா என்ற பாடல் அனைத்து மியூசிக் தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பாடலின் லிரிக்கல் வீடியோ மாலை 5.05 மணிக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாடலை பொறுத்தவரை, சமீபத்தில் ’இருங்க பாய்’ என மீம்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தையை அனிருத் பாடலில் வைத்துள்ளார். பாடல் வைப் மெட்டீரியலாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.