‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘அசுரன்’. கடந்த ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது. இதனை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். எழுத்தாளர் பூமணியின் நாவலான ‘வெக்கை’யை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பலரது மனதை ஈர்த்திருந்தது. இதனை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தனுஷின் வேடத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு ‘நாரப்பா’ என பெயர் வைத்துள்ளனர். அச்சு அசலசாக தனுஷின் வேடத்திற்கு வெங்கடேஷ் பொருந்தி வந்துள்ளார். நாரப்பா படத்தை பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அடாலா இயக்கி உள்ளார். நிலவுடமைச் சமூகத்தை காட்சி படுத்தும் இந்தப் படத்தின் கதை தெலுங்கிற்கும் பொருந்தி வருவதால் அப்படியே ரீமேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.