சினிமா

அண்ணனை காதலிக்கும் தங்கை... இந்தியாவில் முதல் ஏடாகூட திரைப்படம்

அண்ணனை காதலிக்கும் தங்கை... இந்தியாவில் முதல் ஏடாகூட திரைப்படம்

webteam

அண்ணனை காதலிக்கும் தங்கை என வித்தியாசமான கோணத்தில் கூடா காதலை மையப்படுத்தி ஒரு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

பாடல் இல்லா திரைப்படம், சணடையில்லா திரைப்படம், இருவர் மட்டுமே நடிக்கும் படம், 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சினிமா என பல்வேறு மாறுபட்ட சினிமாக்கள் தயாராகி வந்திருக்கின்றன. இந்நிலையில், ஐ ஆம் ரோஷினி என்கிற பாலிவுட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. காரணம் ஜெயந்தி லால் பாட்டியா இயக்கியுள்ள ஐ ஆம் ரோஷினி திரைப்படம் அண்ணன் தங்கைக்குள் ஏற்படும் பொருந்தாக் காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்தத் திரைப்படமும் இப்படியொரு கதைக்களத்தை இந்திய சினிமா வரலாற்றில் தொட்டது இல்லை. இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது முதல் இந்தப்படம் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. கதைப்படி, மதுப்பூரில் சகோதரன், மற்றும் மாமா உடன் வசித்து வருகிறாள் ரோஷினி. கடுமையாக கண்டிக்கும் பெற்றோர்கள், காமவெறிபிடித்த மாமன், காதலிப்பதாக ஏமாற்றும் காதலன் என சிக்கித்தவிக்கிறாள் ரோஷினி. இவர்களுக்கு மத்தியில் தங்கைக்கு ஆறுதலாக இருந்து பக்கபலமாக இருக்கிறார் அவளது சகோதரன். இதனால், அவர்களிடையேயான அன்பு காதலாக மாறுகிறது. இதுதான் கதை. 
அந்த ட்ரெய்லரில் இதுவரை இந்திய சினிமா சொல்லாத கதை என குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரித்துள்ள சுரேஷ் தாமஸ், ‘பொருந்தாக் காதல் கதைதான், ஆனால் இந்தப்படத்தில் தவறான காட்சிகள் இல்லை. ஆதரவாக இருந்து கவனிக்கும் அண்ணன் மீது தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தைத்தான் படமாக்கியுள்ளோம்’என்கிறார். ஆனால், இந்தப்படத்தின் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்ல இருக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் ஏற்படும். இது ஒரு அப்பாவித்தனமான உணர்ச்சியற்ற இரு பாத்திரங்களுக்குள் நடக்கும் கதை. ரசிகர்களை இந்தப்படம் ஆழமாகப் புரிந்து கொள்ள வைக்கும்’என்கிறது படக்குழு. இந்தப்படத்தில் அங்கிதா பரிஹர் சகோதரியாகவும், யாஸ் ராஜ்பாரா அண்ணனாகவும் நடித்துள்ளனர்.