சினிமா

சமந்தாவின் ஒரு நாளுக்காக காத்திருக்கும் படக்குழுவினர்!

சமந்தாவின் ஒரு நாளுக்காக காத்திருக்கும் படக்குழுவினர்!

webteam

சமந்தாவின் ஒருநாள் கால்ஷீட்டிற்காக அவரது வருங்கால மாமனார் நாகர்ஜூனா நடிக்கும் படக்குழுவினர் காத்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 
தமிழ், தெலுங்கு என பல பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ள சமந்தா பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில் ஓம்கர் இயக்கத்தில் நாகர்ஜூனா நடித்து வரும் ராஜு ஹாரி ஹாதி-2 படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா. 
இந்தப்படத்தில் சீரத் கபூர் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படம் அக்டோபர் 13ம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அனைவரும் அவரவர் படப்படிப்பு பகுதிகளை முடித்து விட்டனர். சமந்தா நடிக்கும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 
அவர் ஒருநாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ஷூட்டிங் முடிந்து விடும் எனக் கூறப்படுகிறது. சமந்தா பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவரால் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. அவருக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். இதனால் போஸ்ட் ப்ரடெக்சன் பணிகளிலும் தாமதமாவதாக கூறப்படுகிறது. 
நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் திருமணம் கோவா கடற்கரையில் அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.