சினிமா

இன்றே ஓடிடியில் வெளியான ’தி ஃபேமிலி மேன் 2’

இன்றே ஓடிடியில் வெளியான ’தி ஃபேமிலி மேன் 2’

sharpana

நாளை வெளியாவதாக இருந்த ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் இன்றே ஓடிடியில் வெளியாகியுள்ளது.

2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அமேசான் பிரைம் தளத்தில் ஜூன் 4-ம் தேதி 'தி ஃபேமிலி மேன் 2' வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு. சமீபத்தில் வெளியான அதன் ட்ரைலர் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சையையும் கண்டனங்களையும் குவித்துள்ளது.

இந்நிலையில், நாளை வெளியாகவிருந்த ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் இன்றே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.