அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தி எமோஜி மூவி என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
செல்போன்களில் குறுந்தகவல் அனுப்பும்போது அழுகை, கோபம் போன்ற உணர்வுகளை பதிவுசெய்யும் எமோஜி பொம்மைகளை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் எமோஜி பொம்மைகளாக வலம் வருகின்றன. இத்திரைப்படம் குழந்தைகளை கவரும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.