சினிமா

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி இன்று அறிவிப்பு

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி இன்று அறிவிப்பு

webteam

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

தனி ஒருவன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் விடுமுறை கொண்டாட்டமாக டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. படத்தின் இசை வெளியீடு நடைபெறாமலே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு தேதியை இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டூடியோஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அனிரூத் இசையில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் ‘இறைவா’ என்ற பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீடு தேதியும் அறிவிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் இந்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் கொண்டாட துவங்கியுள்ளனர். ரிலீஸ் தேதிக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.