சினிமா

பிக்பாஸ்: வெளியேற்றப்படுகிறார் நடிகை!

பிக்பாஸ்: வெளியேற்றப்படுகிறார் நடிகை!

webteam

தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர் வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் முதல் ஆளாக வெளியேற்றப்படுகிறார் நடிகை  முமைத்கான். 

போதை பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக, தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக நடிகை முமைத்கானும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். 

மற்ற நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பிய போலீசார், முமைத்கானுக்கு எங்கு சம்மன் அனுப்ப என்று குழம்பினர். காரணம் அவரது வீடு மும்பையில் இருக்கிறது. இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களை தொடர்பு கொண்டு வரும் 27-ம் தேதி அவரை ஆஜராக சொல்லும்படி போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மனை கொடுத்துள்ளனர். 

ஆனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதால் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் முமைத்கான் ஆஜராக கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்க மறுத்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 27ம் தேதி அவசியம் விசாரணைக்கு வரவேண்டும் உறுதியாக கூறி விட்டனர். இதனால், போட்டியில் இருந்து முதல் ஆளாக முமைத்கான் வெளியேற்றப்பட இருக்கிறார். முமைத்கானிடம் விசாரணை முடிந்த பிறகு அவரை மீண்டும் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்க்க முடியுமா அல்லது மும்பையில் நடைபெற இருக்கும் 11வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்யலாமா என ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.