சினிமா

‘நன்றி நெய்வேலி’ - ரசிகர்கள் பட்டாளத்துடன் ட்விட்டரில் விஜய் போட்ட செல்ஃபி

‘நன்றி நெய்வேலி’ - ரசிகர்கள் பட்டாளத்துடன் ட்விட்டரில் விஜய் போட்ட செல்ஃபி

webteam

தனது ரசிகர்களை சந்திக்க வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘நன்றி நெய்வேலி’ என நடிகர் விஜய் ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வியாபாரம் தொடர்பாக அண்மையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சென்னை அருகேயுள்ள அவரது பனையூர் வீட்டிற்கு அழைத்துச்சென்று விசாரிக்கப்பட்டார். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து விஜய் படத்துக்கு நெய்வேலியில் சினிமா சூட்டிங் எடுக்க அனுமதி வழங்கியதை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு கூடிய விஜய் ரசிகர்கள், விஜய்க்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். தனது ரசிகர்கள் குவிந்ததால் வெளியே வந்த விஜய், அவர்களை பார்த்து கை அசைத்துச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதைத்தொடர்ந்து சூட்டிங் வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அங்கு நின்றவாரே தனது போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தற்போது அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள விஜய், ‘நன்றி நெய்வேலி’ என அதில் தெரிவித்திருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.