தனக்கு விருது வழங்கியமைக்காக கமல்ஹாசன் ஆந்திர அரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஆந்திர அரசு, நடிகர் ரஜினிகாந்திற்கு 2016ம் ஆண்டிற்கான என்.டி.ஆர் நேஷனல் அவார்ட் அறிவித்து கவுரவித்துள்ளது. அதேபோல் கமல்ஹாசனுக்கு 2014 ஆண்டுக்கான விருதை அறிவித்துள்ளது. இதற்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். கூடவே ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்தை தெரிவித்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் “என்னை ஆந்திர அரசு கவுரவப்படுத்தியதற்கு நன்றி. தொடர்ந்து என்னை ஆதரிப்பதற்காக உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டுள்ளேன். அங்கிருந்துதான் என் கேரியர் தொடங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.