சினிமா

ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” வெளியீடு!

webteam

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கள் பாடலான “தமிழன் பாட்டு” வெளியானது

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்த நிலையில், அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத்தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், சிம்பு பாம்பை கையில் வைத்திருந்தது சர்ச்சையாகி விலங்கு நல வாரியம் கண்டனம் தெரிவித்த நிலையில், அது குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக “ தமிழன் பாட்டு” இன்று (திங்கள்கிழமை) காலை பத்து மணிக்கு வெளியானது. தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் எனத் தெரிகிறது. பாடலின் லிரிக் வீடியோ மாலை 4. 50 மணிக்கு வெளியாகவுள்ளது