சினிமா

ரசிகர்கள் தயாரிப்பில் ‘தளபதி62’ விஜய்யின் நியு லுக் ?

ரசிகர்கள் தயாரிப்பில் ‘தளபதி62’ விஜய்யின் நியு லுக் ?

webteam

ரசிகர்கள் தயாரிப்பில் உருவான  ‘தளபதி62’ விஜய்யின் புதிய தோற்றம் ஒன்று வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமற்ற இப்படத்தை அவரது ரசிகர்கள் வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி62’. இதன் பூஜை மற்றும் படப்பிடிப்பு கடந்த 19 தேதி அன்று தொடங்கியது. பூஜைக்குப் பின் முறையாக க்ளாப் அடித்து நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். இந்தப் படப்பிடிப்பு மொத்தம் 30 நாள்கள் சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அதற்காக முயற்சிகளை படக்குழு முடக்கி விட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

இந்நிலையில்   விஜய்  இளமையான தோற்றத்தில் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இது படக்குழுவினர் வெளியிட்டது அல்ல; ரசிகர்களின் தயாரிப்பில் உருவானது. ’துப்பாக்கி’யில் உள்ள விஜய்யை லேசாக மாற்றம் செய்து ரகர்கள் வெளியிட்டுளனர். அதில் இளம் தாடியுடன் தற்போதையை ட்ரெண்டில் இருக்கும் ஹேர்ஸ்டைலுடன் விஜய் காணப்படுகிறார். அந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.