25 வருடங்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி ஆகிய இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த படம் தளபதி. இந்த படம் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பெரும் வெற்றியை பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் இணைய பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருவதாக தெரிகிறது.
ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இணைந்து மீண்டும் நடிக்குமாறு ஒரு ஸ்கிரிப்டை மணிரத்தினம் தயாராக வைத்திருப்பதாகவும் அதற்காக இரண்டு நடிகர்களிடமும் மணிரத்தினம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் சாத்தியம் உள்ளது. இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைப்பெறும் எனக் கூறப்படுகிறது. 2018 ஆண்டில் வெளிவரும் எனவும் தெரிகிறது.