சினிமா

படப்பிடிப்புக்காக 747 ரக நிஜ விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்கச் செய்த நோலன்!!

படப்பிடிப்புக்காக 747 ரக நிஜ விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்கச் செய்த நோலன்!!

webteam

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ‘டெனட்’ என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டத்திற்குப் பெயர் போன கிறிஸ்டோபர் நோலன், ‘டெனட்’படத்திற்காக 747 ரக நிஜ விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்கச்செய்துள்ளார். உலக சினிமா இயக்குநர்களையும், ரசிகர்களையும் பிரமிக்க வைத்துள்ளது இந்தச் சம்பவம்.

சமீபத்திய பேட்டில் ஒன்றில் கிறிஸ்டோபர் நோலன் இது தொடர்பாகத் தெரிவித்துள்ளார். அதில், விமானம் நொறுங்குவது போல எடுக்கப்பட வேண்டிய காட்சிக்காக செட்கள் அமைத்தோ அல்லது கிராபிக்ஸ் முறையிலேயோ விமானத்தை உருவாக்கலாம் என நினைத்தோம். ஆனால் எங்களது திட்டம் அதிக செலவை இழுப்பதாக இருந்தது. நிஜ விமானத்தை வாங்குவதைக் காட்டிலும் அதிக செலவை உண்டாக்குவதாக இருந்தது.

மேலும் நிஜ விமானம் என்றால் காட்சியாகப் பார்க்க இன்னும் நேரலையாக இருக்குமென்று யோசித்தோம். சற்று விசித்திரமானது தான். ஆனால் நாங்கள் புதிய விமானத்தையே வாங்கி காட்சிக்குப் பயன்படுத்தினோம். அதனை வெடிக்கச் செய்தோம். காட்சி நன்றாக வந்தது. சரியாகப் படம்பிடித்து காட்சியாக்கினோம் எனத் தெரிவித்துள்ளார்