சினிமா

புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்!

புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்!

sharpana

நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நடிகர் நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித ராஜ்குமார், நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடல் பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்த காண்டிவரா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.