நடிகர் சிரஞ்சீவி x page
சினிமா

47 ஆண்டு திரைவாழ்க்கை: ரசிகர்களுக்கு சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பதிவு.. பவன் கல்யாண் வாழ்த்து!

நடிகர் சிரஞ்சீவி திரைப்படத் துறையில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

Prakash J

நடிகர் சிரஞ்சீவி திரைப்படத் துறையில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது ரசிகர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் உருக்கமாக நீண்ட பதிவு ஒன்றை சிரஞ்சீவி எழுதியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி திரைப்படத் துறையில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது ரசிகர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் உருக்கமாக நீண்ட பதிவு ஒன்றை சிரஞ்சீவி எழுதியுள்ளார். கோனிடெலா சிவசங்கர வரபிரசாத் என்ற தனது பெயர் 47 ஆண்டுகளுக்குமுன் சிரஞ்சீவி என மாறியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த 47 ஆண்டுகளில் தான் பல கோடி குடும்பங்களில் அண்ணன், தம்பி, தந்தை என உறவுகளில் ஒருவராகவே மாறிவிட்டதாக நெகழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மைல்கல் படமான ’பிராணம் கரீது’ பற்றியும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "22 செப்டம்பர் 1978. 'கோனிடேலா சிவ சங்கர வர பிரசாத்' என்று அழைக்கப்படும் நான், ’பிராணம் கரீடு’ படத்தின் மூலம் 'சிரஞ்சீவி' என்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். இன்று 47 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறேன். இந்தப் படம் எனக்கு ஒரு நடிகனாகவும், உங்கள் மூத்த சகோதரனாகவும், மகனாகவும், குடும்ப உறுப்பினராகவும், ஒரு மெகாஸ்டாராகவும், நீங்கள் எப்போதும் எனக்கு ஆதரவளித்து, அன்புடன் துணை நின்றிருக்கிறீர்கள். இதற்காக தெலுங்கு சினிமா பார்வையாளர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

திரையுலகில் சிரஞ்சீவி 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவிவுக்கு அவருடைய சகோதரரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணும் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அவர், "துர்கா மாதா அவருக்கு சாதனைகள், ஆரோக்கியம் மற்றும் மிகுதியால் நிறைந்த நீண்ட ஆயுளை வழங்கட்டும். கூடுதலாக, எதிர்காலத்தில் அவர் இன்னும் பல மாறுபட்ட வேடங்களில் நடிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். சிரஞ்சீவி ஒரு பிறவிப் போராளி” என அதில் தெரிவித்துள்ளார்.