சிவகார்த்திகேயன்  x
சினிமா

SK 25 அப்டேட் | தீ பரவட்டும்.. நெருப்புடன் நிற்கும் சிவகார்த்திகேயன்.. நாளை அறிவிப்பு டீசர்!

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் SK 25 படத்திற்கான அறிவிப்பு டீசர் நாளை தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

300 கோடிக்கும் மேல் வசூல்செய்த அமரன் போன்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK25 திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ளது.

சிவகார்த்திகேயன்

சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்கவிருக்கின்றனர். படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைக்கவிருப்பதாகவும் பணியாற்றவிருக்கும் நிலையில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படத்தின் புதிய டீசர் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில் இன்று வெளியாகவிருந்த டீசர் நாளை வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.

தீ பரவட்டும்.. நெருப்புடன் நிற்கும் சிவா!

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் SK25 படமானது இந்தி திணிப்பை எதிர்க்கும் கதையாக சொல்லப்படும் நிலையில், இந்த படத்தின் பெயர் ’பராசக்தி’ என்ற தகவல் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் புதிய டீசர் அறிவிப்பானது படத்தின் பெயர் வெளியீடாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்துவருகிறது. அதன்படி, இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட டீசர் நாளை வெளியாகும் என ஒரு போஸ்டருடன் படக்குழு பதிவிட்டுள்ளது.

படக்குழு வெளியிட்டிருக்கும் புதிய போஸ்டரில், முந்தைய காலகட்டத்திலான உடையில் இருக்கும் சிவகார்த்திகேயன் கையில் நெருப்புடன் இருக்கும் பெட்ரோல் குண்டுடன் எறிவதற்காக நிற்கிறார். அந்த புகைப்படத்துடன் ‘ தீ பரவட்டும்.. நாளை மாலை 4 மணி முதல்’ என அறிவிப்பு டீசர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.