சினிமா

வாடகைத்தாய் மூலம் நயன்-விக்கி குழந்தை பெற்ற விவகாரம்: விசாரிக்க அரசு சார்பில் குழு அமைப்பு

webteam

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா எனக் கண்டறிய சுகாதார இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மருத்துவ சேவை இயக்குநரம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டுமா என முடிவு எடுப்பார் என பதிலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஒரு சுகாதார இணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார். 3 பேர் அடங்கிய அந்த குழு ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை சுகாதாரத்துறைக்கு வழங்கவுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் மருத்துவ ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? இந்திய அரசு வகுத்துள்ள சட்டங்களை முறையாகப் பின்பற்றி வாடகைத்தாய் முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? ஆகியவை அனைத்தையும் குழு விசாரித்து அறிக்கை அளிக்கவும். தேவைப்பட்டால் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியிடம் நேரில் இக்குழு விசாரணை நடத்தும் எனவும் கூறப்படுகிறது.