சினிமா

மொட்டை தலையுடன் தனுஷ் நாயகி: வைரல் போட்டோ

மொட்டை தலையுடன் தனுஷ் நாயகி: வைரல் போட்டோ

webteam

நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த நடிகை ஒருவர் மொட்டை அடித்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ படத்தில் நடித்தவர் நடிகை லேனா. இவர் ஒரு மலையாள நடிகை. மனோதத்துவ மருத்துவராக நடித்துள்ள லேனா உண்மையில் ஒரு மனநல மருத்துவர்தானாம். இவர் திடீரென்று மொட்டை அடித்துள்ளார். அந்தப் படத்தை தனது வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பகுதியில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

லேனா தனது வேண்டுதலுக்காக பழனி முருகன் கோயிலில் மொடைப்போட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், பலர் அந்தப் படத்தை அவரது புதிய கெட் அப் என கூறி வருகின்றனர். லேனா ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட். இளம் நடிகையான இவர் பிருத்விராஜூக்குகூட தாயாக நடித்துள்ளார். இந்நிலையில் அவரது புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.