சினிமா

ரஜினியின் ‘2.0’ படத்தையும் வெளியிடுவோம் - தமிழ் ராக்கர்ஸ்

rajakannan

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தையும் விரைவில் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் கூறியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயர் பெரும்பாலும் அறிந்த பெயராகவே ஆகிவிட்டது. திரைப்படம் வெளியான சில மணி நேரங்களில் அதனை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் சட்ட விரோதமாக வெளியிட்டு வருகின்றது. தமிழ் ராக்கர்ஸ் திரைப்படங்களை வெளியிடுவதை தடுப்பதற்காக தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதனை இதுவரை தடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தையும், படம் வெளியான நாளிலே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படம் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது. ‘2.0’ படம் நவம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.