விடாமுயற்சி  புதிய தலைமுறை
சினிமா

விடாமுயற்சி சிறப்புக் காட்சி இருக்கா?

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி குறித்து அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது.

1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான BREAK DOWN படத்தின் தழுவலாக, உருவாக்கப்பட்டுள்ள இதில் அர்ஜூன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி

சமீபத்தில், விடாமுயற்சி திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், வெளியான டிரெய்லரும் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை ( பிப்ரவரி 6 ) வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக, படக்குழு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில் வரும் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சியினை காலை 9 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தவகையில், நாளைமட்டும் காலை 9 மணி சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.