திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைத்த தமிழக அரசு pt
சினிமா

குறைகிறதா டிக்கெட் விலை? திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை பாதியாக குறைத்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை (Local Body Entertainment Tax - LBET) 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

PT WEB

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகிறது. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்த கேளிக்கை வரி மிகவும் அதிகமாக உள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் திரைப்படத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்கம்

அதன் காரணமாக இந்த வரியை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திரைப்படத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

கேளிக்கை வரியை குறைத்து உத்தரவு..

கேளிக்கை வரியை குறைக்கவேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

திரையரங்கம்

இதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை (Local Body Entertainment Tax -LBET) 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்