ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்படமான ஜல்லிக்கட்டு ஷூட்டிங் நடைபெற்று வருவதாக அதன் தயாரிப்பாளர் அஹிம்சா தெரிவித்துள்ளார்.
'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்று தலைப்பில் தமிழ்ப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இதனை சந்தோஷ் இயக்குகிறார். அதன் தயாரிப்பாளர் அஹிம்சா, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியையும் போராட்டத்தையும் அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவிடம் திரைப்படத்திற்கான கதைக்கருவை முறைப்படி அளித்து இதை எடுத்து வருகின்றனர். இதற்கு முன் ஜான் எஃப் கென்னடி, அல் கோர், பராக் ஒபாமா உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கிய படங்களின் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளது. குட் வில் ஹண்ட்டிங், சோஷியல் நெட்வொர்க், மற்றும் தி கிளாசிக் லவ் ஸ்டோரி போன்ற விருது பெற்ற திரைப்படங்கள் இதற்கு முன் இங்கு தங்களின் படப்பிடிப்பை நடத்தியுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடக்கும் முதல் இந்திய திரைப்படம் இதுதான். இப்படக்குழுவினர் சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஒரு ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
ஹார்வார்ட் பல்கலை வளாகத்தில் விருந்தினராகப் பங்கேற்று நடிகர் கமலஹாசன் உரையாற்றியிருக்கிறார. அந்த வளாகத்தில் ஜல்லிக்கட்டு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.