MK Stalin, Soundarya Rajinikanth, Magesh Raj Pasilian x page
கோலிவுட் செய்திகள்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற `வித் லவ்' தயாரிப்பாளர்கள்! | With Love

பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான படம் `வித் லவ்'. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

Johnson

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் மதன் இயக்கி பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான படம் `வித் லவ்'. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரித்தார்.

With Love

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள்  தமிழக முதல்வரைச் சந்தித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.