எதிர்நீச்சல் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

Ethirneechal Serial | அடுத்த ஆதி குணசேகரன் யார்? இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த Twist!

ஆதிகுணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருப்பது போலவும், அவரைத்தொடர்ந்து கதை மேலும் நகரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Jayashree A

எதிர்நீச்சல் நாடகத்தில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் மூலம், பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து. இவர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஜி மாரிமுத்து

இவருக்கு பிறகு எதிர்நீச்சல் நாடகத்தில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தை லாவகமாக கையாண்டு இருக்கிறார், அந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம்.

அதன்படி ஆதிகுணசேகரன் தனது சொத்து முழுவதையும் தன் தம்பிகளுக்கு எழுதி வைத்துவிட்டு காணாமல் போய்விட்டதாக கதையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். இதன் மூலம் அடுத்த ஆதிகுணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்புக்கு இயக்குநர் திருச்செல்வம் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எதிர்நீச்சல்

இருப்பினும் ஆதிகுணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருப்பது போலவும், அவரைத்தொடர்ந்து கதை மேலும் நகரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.