Rajinikanth Thalaivar 173
கோலிவுட் செய்திகள்

`தலைவர் 173' இயக்குநர் யார்? எப்போது அறிவிப்பு வரும்? | Rajinikanth | Thalaivar 173

தனுஷ், ஆர் ஜே பாலாஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உட்பட பலரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது. ஆனால் அவர்கள் எல்லாம் ரஜினி படம் இயக்க அணுகப்பட்டனரா என்பது பற்றிய தெளிவான தகவல் ஏதும் வரவில்லை.

Johnson

ரஜினிகாந்தின் 'தலைவர் 173' படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுந்தர் சி வெளியேறியதால், பல இயக்குநர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ரஜினி 8 இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும், டிசம்பர் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர் சி இயக்குவதாக நவம்பர் 5ம் தேதி அறிவித்தனர். அருணாச்சலம் படத்திற்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படம் பொங்கல் 2027க்கு வெளியீடு என அறிவித்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே, இந்தப் படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் இயக்குநர் சுந்தர் சி.

Kamal, Rajini

எனவே இப்போது `தலைவர் 173' படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தை இயக்குகிறார் என பலரது பெயர் தொடர்ச்சியாக சொல்லப்பட்டன. தனுஷ், ஆர் ஜே பாலாஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உட்பட பலரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது. ஆனால் அவர்கள் எல்லாம் ரஜினி படம் இயக்க அணுகப்பட்டனரா என்பது பற்றிய தெளிவான தகவல் ஏதும் வரவில்லை. இப்போதைக்கு இந்தப் படம் பற்றி சொல்லப்படுவது என்னவென்றால் ரஜினிகாந்த் `தலைவர் 173' படத்திற்காக 8 இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தக் கதைகளை படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்து விவாதித்து, யாரை வைத்து படம் எடுக்கலாம் என முடிவெடுக்க உள்ளனராம்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிவும் தருவாயில் இருப்பதால், அடுத்த படத்தை விரைவாக முடிவு செய்யும் சூழலில் இருக்கிறார் ரஜினி. எனவே இந்த முடிவு சீக்கிரம் எடுக்கப்பட்டு, சீக்கிரமே அறிவிக்கப்படும் எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் வருவதால், அன்று `ஜெயிலர் 2' க்ளிம்ப்ஸ் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.