Thaman Ilaiyaraaja, A R Rahman
கோலிவுட் செய்திகள்

"ராஜா, ரஹ்மானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!" - தமன் | Thaman | Ilaiyaraaja | A R Rahman

நான் ஏற்கெனவே நடிகனாக `பாய்ஸ்' படத்தில் நடித்த பின்பே இசையமைப்பாளராக மாறினேன். ஆனால் நடிப்பு என்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது உங்களுக்கு தெரியாது. அது மிகப்பெரிய டார்ச்சர்.

Johnson

தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன். தற்போது OG Tour என்ற பெயரில் கான்சர்ட் செய்ய உள்ளார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. 

" 'பெத்தி' படம் மூலம் ரஹ்மான் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார், அவர் உங்களுக்கு போட்டி என நினைக்கிறீர்களா?"

"போட்டி எனc சொல்ல முடியாது. அது அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. அவர் இப்போதும் 28 வயது நபர்களுடன் போட்டியாக இருக்கிறார் என்பது நல்ல விஷயம் தானே, அதை கற்றுக் கொள்ள வேண்டும். இளையராஜாவை எடுத்துக் கொண்டாலும், 70 வயதுக்கு மேலே ஆன போது ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ கட்டினார். அது எவ்வளவு பெரிய விஷயம், நமக்கு அது எவ்வளவு தைரியத்தைக் கொடுக்கும். நம் வயதுக்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும். 70+ல் அவர் கோடம்பாக்கத்தில் ஸ்டூடியோ கட்டுகிறார் என்றால், அவருக்கு வாழ்க்கையில் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இது எல்லாம் நமக்குப் பாடம். ரஹ்மான், சிக்கிரி பாடல் வெளியிட்ட போதே படம் ஹிட் என தெரிந்தது. எனவே நம்முடைய சீனியர்கள், நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது எனச் சொல்வது மகிழ்ச்சியளிக்கிறது."

Thaman

உங்கள் இசை சவுண்ட் பாக்ஸ் மட்டுமல்லாமல் இதயத்தையும் அதிர வைக்கிறது. ஸ்பீக்கர் உடைகிறது, BP உள்ளவர்களுக்கு அதெல்லாம் சிரமமாக இருக்கிறதே. மென்மையான விஷயங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா?

"அது சினிமாவைப் பொறுத்ததுதான். தொடர்ச்சியாக சண்டைக் காட்சிகள் இருந்தால் இசையும் ஹெவியாகத்தான் இருக்கும். திரையில் அவர்கள் அடித்துக் கொண்டால், நானும் அடிக்க வேண்டும். காதலித்தால் அதற்கு ஏற்ப இசை கொடுக்க வேண்டும். ஸ்பீக்கர் உடைவது பற்றி நான் ஏன் என ஆராய வேண்டும்."

தமிழில் ’இதயம் முரளி’ படத்தில் நடித்திருக்கிறீர்கள், தெலுங்கிலும் நடிப்பீர்களா?

"இல்லவே இல்லை. ’இதயம் முரளி’ படத்தில் நடிக்க அந்த இயக்குநர் எப்படி சம்மதிக்க வைத்தார் என்பதே இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால், ’இதயம் முரளி’ ரொம்ப ஸ்பெஷலான படம். சமீபத்தில் டப்பிங்கின் போது படத்தைப் பார்த்தேன், சிறப்பாக வந்திருக்கிறது. ஜூலை 10ஆம் தேதி படம் வெளியாகிறது, கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும். நான் ஏற்கெனவே நடிகனாக `பாய்ஸ்' படத்தில் நடித்த பின்பே இசையமைப்பாளராக மாறினேன். ஆனால் நடிப்பு என்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது உங்களுக்கு தெரியாது. அது மிகப்பெரிய டார்ச்சர். ஏசி அறையில் அமர்ந்து ட்யூன் போடு என கடவுள் ஆசிர்வதித்திருக்கிறார். நமக்கு ஏன் வேண்டாத வேலை."

Thaman

இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைத் தானமாகக் கொடுக்க உள்ளீர்கள் என அறிவித்திருந்தீர்களே?

"நான் படங்களில் பணியாற்றி அதன்மூலம் வரக்கூடிய வருமானமே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. கான்சர்ட், டிவி நிகழ்ச்சிகள் மூலமாக வரக்கூடிய பணம் எல்லாவற்றையும் ஒரு ஆசீர்வாதமாக பார்க்கிறேன். எனவே, அந்த ஆசீர்வாதங்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் அந்தப் பணத்தைத் தொண்டு பணிகளுக்கு அளிப்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன்."