விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பிரவீன் கே இயக்கி சமீபத்தில் வெளியான படம் `ஆர்யன்'. அக்டோபர் 31 திரையரங்கில் வெளியான இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்தது. இப்படம் குறித்து படக்குழுவினர் சிறப்பாக கூறினாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.  படத்தின் க்ளைமாக்ஸ் உட்பட பல சிக்கல்களை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினர். இப்போது அதை கருத்தில் கொண்டு படத்தில் மாற்றத்தை செய்திருக்கிறார்கள். 
படத்தின் வெளியீட்டுக்குப் பிறகான ஒரு சமீபத்திய நிகழ்வில் "பார்வையாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு, இறுதிக்காட்சியின் ஆறு நிமிடங்களை தானும் குழுவினரும் நீக்கி உள்ளதாக விஷ்ணு விஷால் அறிவித்தார்.  படத்தின் க்ளைமாக்ஸ் பகுதிகளில் படத்தின் வேகம் குறைவதை பலர் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாற்றம் படத்தின் அனுபவத்தை ரசிகர்களுக்கு சிறந்ததாக்கும்" என்று விஷ்ணு விஷால் கூறினார்.
விஷ்ணு விஷால் மீண்டும் காவல் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில், தொடர் கொலைகளை செய்யும் ஒரு கொலையாளி, அவனை தடுக்க முயலும் காவல்துறை என்ற களத்தில் உருவாகியுள்ளது `ஆர்யன்'. படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களை, படத்தில் இப்போது செய்யப்பட்டுள்ள திருத்தம், மாற்றுமா எனப் பார்ப்போம்.