Vishal Magudam
கோலிவுட் செய்திகள்

`கடல்ல வாழுறவன் வேற; கடலையே ஆளுறவன் வேற..' வெளியானது விஷாலின் ’மகுடம்’ டீசர்! | Vishal | Magudam

விஷால் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Johnson

நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 35ஆவது படம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99ஆவது படம். துவக்கத்தில் இந்தப் படத்தை `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இப்படத்திலிருந்து ரவி அரசு நீக்கப்பட்டு, படத்தை விஷாலே இயக்க துவங்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதை சமீபத்தில் அறிவித்தனர். தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஷால் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மிஷ்கின் விலகியதை அடுத்து `துப்பறிவாளன் 2' படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார் விஷால். அந்தப் படம் மூலம் தான் இயக்குநராக விஷால் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், `மகுடம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.