Vishal Magudam
கோலிவுட் செய்திகள்

தினமும் 12 மணிநேரம் விஷாலின் `மகுடம்' பட ஷூட்! | Vishal | Magudam

மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 800 பேர் இதில் பணியாற்றியுள்ளனர்.

Johnson

நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 35வது படம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படம். துவக்கத்தில் இந்தப் படத்தை `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இப்படத்திலிருந்து ரவி அரசு நீக்கப்பட்டு, படத்தை தானே இயக்குவதாக தீபாவளி அன்று அறிவித்தார் விஷால். இப்போது இது விஷால் இயக்கும் முதல் படமாக வர இருக்கிறது. இதன் டப்பிங் பணிகளும் சமீபத்தில் துவங்கியது.

தற்போது இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ். சண்டை காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 800 பேர் பணியாற்றியுள்ளனர். மேலும் இந்த க்ளைமாக்ஸ் காட்சியை 17 நாட்கள் தொடர்ந்து, மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை என 12மணி நேரம் நடத்தி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிந்துள்ளனர். 

தற்போது மகுடம் பட போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் கதைக்களம் ஒரு துறைமுகத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு கார்ப்பரேட் அலுவலக ஊழியர், ஒரு இளம் தாதா மற்றும் சற்று வயதான தலைவர் என விஷால் மூன்று தனித்துவமான தோற்றங்களில் இடம்பெற்றுள்ளார். இந்த அதிரடி படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார், அஞ்சலி மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.