Vikram Chiyaan 63
கோலிவுட் செய்திகள்

23 ஆண்டுகள் கழித்து விக்ரம் செய்யும் விஷயம்! | Vikram | Chiyaan 63

முன்பு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் என சொல்லப்பட்ட `சியான் 63' படம் தான் இது. இயக்குநர் மற்றும் மாற்றப்பட்டுள்ளார்.

Johnson

விக்ரம் நடிப்பில் இந்தாண்டு மார்ச் மாதம் வெளியான படம் `வீர தீர சூரன்'. இப்படத்திற்கு பின் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்தை, அதாவது `சியான் 63' படத்தை `மண்டேலா', `மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. பின்பு விக்ரம் - பிரேம்குமார் இணையும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் விக்ரமின் அடுத்த படம் குறித்து புது அறிவிப்பு வந்தது.

விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்குவார் என்று அறிவித்துள்ளனர். முன்பு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் என சொல்லப்பட்ட `சியான் 63' படம் தான் இது. இயக்குநர் மற்றும் மாற்றப்பட்டுள்ளார். போடி கே ராஜ்குமாருக்கு சினிமாவில் இதுதான் அறிமுகப்படம் என்றாலும், முன்பு `ஆமென்' மற்றும் `Lo and Behold' போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 23 ஆண்டுகள் கழித்து ஒரு அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விக்ரம்.

Vikram

விக்ரம் இதுவரை மூன்றே மூன்று அறிமுக இயக்குநர்கள் படங்களில் தான் நடித்திருக்கிறார். 1992ல் பி சி ஸ்ரீராம் இயக்கிய மீரா, 1999ல் பாலா இயக்கிய `சேது', 2002ல் பாலாஜி சக்திவேல் இயக்கிய `சாமுராய்'. இந்த மூன்று படங்கள் தவிர அறிமுக இயக்குநர் படங்களில் நடிக்காமல் இருந்த விக்ரம் இப்போது மீண்டும் ஒரு அறிமுக இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளார்.