Dhananjeyan Sattendru Maarudhu Vaanilai
கோலிவுட் செய்திகள்

"ஜெய் நீங்களும் உங்கள் அண்ணன் விஜய் சார்போல.." - தனஞ்செயன் | Dhananjeyan | Jai

ஜோசப் விஜய் சிஎம் ஆனது, நமக்கும் நம் சினிமா துறைக்கும் பெருமையானது. அவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வதுபோல சினிமா துறைக்கும் நிறைய விஷயங்கள் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Johnson

ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு நடிப்பில் பாபு விஜய் இயக்கியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை'. இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தனஞ்செயன், "விஜய் சாரின் கேரியரில் மிக முக்கியமான மூன்று படங்களை முருகதாஸ் சார் கொடுத்திருக்கிறார். அப்போது விஜய் சாரை வைத்து ’சர்க்கார்’ எடுத்தீர்கள். ஏதோ ஐந்தாறு வருடத்தில் நடக்கப்போகிறது என அப்போதே படத்தில் வைத்துவிட்டீர்கள்.

அடுத்தாக தம்பி ஜெய், அன்புத்தம்பியாக எலெக்ஷன் கேம்பைன் எல்லாம் சென்றார். பல விஷயங்களில் விஜய் சாருக்கு உறுதுணையாக இருந்தார். என் அண்ணனுக்காக என அவர் பல விஷயங்கள் செய்தார். இப்போது அவருடைய அண்ணன் வென்றுவிட்டார். ஜோசப் விஜய் சி ்எம் ஆனது நமக்கும் நம் சினிமா துறைக்கும் பெருமையானது. அவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வதபோல சினிமா துறைக்கும் நிறைய விஷயங்கள் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஜெய்யும் அணில்அபோல உதவி இருக்கிறார்.

முதல் படத்திலேயே விஜயின் தம்பியாக நடித்து வந்தார். இன்று இந்தப் படத்தில் நிறைய விஜய் சாரபோல செய்திருக்கிறார். இனி விஜயை தியேட்டரில் பார்க்க முடியாது, எனவே, ஜெய் அவரைப் போலவே வருவார். நல்ல நல்ல படங்கள் வந்தது என்றால் உங்கள் அண்ணனைப் போலவே நீங்களும் வளர ஒரு வாய்ப்பிருக்கிறது ஜெய" என்றார்.