Vijay Sethupathi Paththa
கோலிவுட் செய்திகள்

விஜய் சேதுபதியின் `பத்தா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | Vijay Sethupathi | Paththa

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `சீதக்காதி' போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் `ட்ரெயின்', பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் `Slum Dog: 33 Temple Road' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் `பாக்கெட் நாவல்', மணிரத்னம் இயக்கும் படம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.

இதில் இன்னொரு படம் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடித்த `பத்தா'. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `சீதக்காதி' போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோ மோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வகுமார் SK மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர்.கலைவாணன் கவனித்துள்ளார். படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக டி.முத்துராஜ் பணியாற்றுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. Star Studio18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.