Vijay Sethupathi Muthu Engira Kaattaan
கோலிவுட் செய்திகள்

துண்டிக்கப்பட்ட தலை.. ஆர்வம் தூண்டும் `காட்டான்' ட்ரெய்லர்! | Vijay Sethupathi | Kaattaan

மணிகண்டன் முதன்முதலில் ’காட்டான்’ கதையை எனக்குச் சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பைப் பகிர்ந்தார். அவர், கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது.

Johnson

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற காட்டான்' வெப் சீரிஸ். `ஆண்டவன் கட்டளை', `கடைசி விவசாயி' படங்களுக்குப் பிறகு இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டனின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மணியுடன் இணைந்து அஜித்குமார் இதனை இயக்கியுள்ளார். மேலும் இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் டீசர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற கதாபாத்திரத்தின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட, அவரைக் கொன்றது யார்? இந்த முத்து யார்? வெட்டப்பட்ட தலையில் இருக்கும் சிரிப்பின் மர்மம் என்ன எனப் பல விஷயங்களைச் சுற்றிச் செல்கிறது இதன் கதை. இந்த ட்ரெய்லர் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த சீரிஸ் குறித்து விஜய் சேதுபதி, “மணிகண்டன் முதன்முதலில் ’காட்டான்’ கதையை எனக்குச் சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பைப் பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்” என்றார்.

Vijay Sethupathi

‘முத்து என்கிற காட்டான்’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.