Vijay Sethupathi Slum Dog
கோலிவுட் செய்திகள்

விஜய் சேதுபதியின் Slumdog: 33 Temple Road டீசர் வெளியீடு! | Vijay Sethupathi

இதில் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழி டீசருக்கு விஜய் சேதுபதியே டப்பிங் பேசியுள்ளார்.

Johnson

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘Slumdog: 33 Temple Road’ டீசர் வெளியானது. சம்யுக்தா நாயகியாக, தபு, துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி டீசருக்கு விஜய் சேதுபதி தானே டப்பிங் செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். `Badri', `Idiot', `Amma Nanna O Tamila Ammayi', `Pokiri', `Desamuduru', `Businessman' என தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் `Slumdog: 33 Temple Road' என்ற தமிழ் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது. இதில் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழி டீசருக்கு விஜய் சேதுபதியே டப்பிங் பேசியுள்ளார்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.