தனது இசையால் தனி இடத்தை பிடித்தவர் வித்யாசாகர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்த இவரின் வீட்டிலிருந்து இன்னொருவர் சினிமாவில் களம் இறங்குகிறார். அது அவரது மகன் ஹர்ஷவர்தன்.
சமீப காலங்களில் பல இசை நிகழ்ச்சிகளில் ஹர்ஷவர்தன் பாடும், ஆடும் வீடியோக்கள் மிகப்பிரபலம். இவர் இசைத்துறையில் தான் வரப்போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இன்னொரு டிராக்கை கையில் எடுத்திருக்கிறார். விரைவில் நடிகராக அறிமுகமாக உள்ளாராம் ஹர்ஷவர்தன். இவரின் முதல் படம் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடக்கிறது
அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் ஹர்ஷவர்தன். லிங்குசாமி - வித்யாசாகர் இடையே நல்ல நட்பு உள்ளது. இருவரும் `ரன்', `ஜி' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். இப்போது வித்யாசாகரின் மகன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குவதாக சொல்லப்படுகிறது. இது பையா படம் போல ஒரு காதல் கதையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.