கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் இயக்கியுள்ள படம் `மாஸ்க்'. இப்படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா பேசிய போது "நான் ஆடியோ லான்ச்சில் கலந்துகொண்டு நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. தமிழில் எனக்கு பெரிய ரிலீஸ் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த படம் கவினுக்கு அவரது கேரியரில் முக்கியமான திரைப்படம். ருஹானிக்கு தமிழில் அறிமுகப்படம், விகர்ணனுக்கும் முதல் படம். சொக்கலிங்கம் சாருக்கு தயாரிப்பாளராக முதல் படம். உங்கள் ஆசியோடு இது பெரிய வெற்றிபெற வேண்டும். இது எதுவும் வெற்றிமாறன் சார் இல்லாமல் நடந்திருக்காது. அவர்தான் பெரிய மாஸ்டர் மாதிரி, நாங்கள் எல்லாம் அவருடைய பப்பெட்ஸ். எல்லாவற்றுக்கும் நன்றி சார்.
ஜிவி சொன்னது மாதிரி எங்களுக்கு நீண்டகால நட்பு இருக்கிறது. அவர் சமீபத்தில் செய்ததிலேயே ஃபன்னான ஆல்பம் இதுதான். இது யூத்துடன் கனக்ட் ஆகும். ஆர் டி சார் ஒரு படம் ஷுட் செய்தால் அந்தப் படத்தில் எல்லோரும் அழகாக இருப்பார்கள். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. என் சக நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. நவம்பர் 21ம் தேதி வெளியாகும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என எல்லாருடைய ஆசியையும் வேண்டிக் கொள்கிறேன்" என்றார்