வீர தீர சூரன் | விக்ரம்  வீர தீர சூரன்
கோலிவுட் செய்திகள்

இன்று மாலை முதல் ' வீர தீர சூரன்'..!

'வீர தீர சூரன்' திரைப்படம் இன்று மாலை 6 மணிக்காட்சி முதல் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ET desk

இன்று மதியம் 3 மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்பதால், விக்ரம் நடிப்பில் ' வீர தீர சூரன் ' திரைப்படம் 6 மணிக் காட்சி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

விக்ரம் நடிப்பில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் இன்று `வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாகவிருந்தது. படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், ப்ரோமோஷனால எந்தக் குறையும் வைக்கக்கூடாது என்பதால், இந்தியா முழுக்கவே படத்துக்கான ப்ரோமோஷனில் ஈடுபட்டது ' வீர தீர சூரன்' படக்குழு. குறிப்பாக பல கல்லூரிகளுக்கு விசிட் அடித்தார்கள். இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான `எச்.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்துக்கு பி4யூ நிறுவனம் பைனான்ஸ் செய்திருக்கிறது. அதில் தான் சிக்கல் வெடித்திருகிறது.ந்

படத்தின் ஓ.டி.டி உரிமத்தை இந்த `பி4யூ' நிறுவனத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.டி.டி உரிமம் விற்கப்படுவதற்கு முன்பே திரைப்படம் வெளியாவதால் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகக் கூறி இந்த `பி4யூ' நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இது குறித்த, வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக சொல்லப்பட்டது. தீர்வு எட்டப்படாததால் , அடுத்த நான்கு வாரங்களுக்கு படத்தை வெளியிட தடை என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இந்த சூழலில், இன்று மதியம் மூன்று மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்றும், படம் இன்று மாலை 6 மணிக்காட்சி முதல் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியயிருக்கிறது.