ரிலீஸுக்காக பல வருடங்களாக காத்திருக்கும் தமிழ் படங்கள் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

தமிழ் சினிமாவில் இத்தனை படங்கள், இத்தனை வருஷமா ரிலீஸுக்காக காத்திருக்கா😱?

வெளியீட்டுக்காக பல வருடங்கள் விளக்கிற்குள் பூதமாய் காத்திருக்கும் படங்களின் பட்டியல் இதோ...

Johnson, அங்கேஷ்வர்

12 ஆண்டுகளாக ரிலீஸுக்கு காத்திருந்த `மத கஜ ராஜா' வெளியாகி பெரிய வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இதுவெல்லாம் அதிசயமாக நிகழும் ஒரு சம்பவம். அப்படியான அதிசயம் நிகழாமல் கிடப்பில் இருக்கும் தமிழ் படங்கள் ஏராளம்.

இந்த எல்லா படங்களின் வெளியீட்டுக்கு தடையாய் இருப்பது பணப்பிரச்சனைதான். அது சென்று சேர வேண்டிய இடம்தான் வெவ்வேறாக இருக்குமே தவிர, பெரும்பாலும் நிதிச்சிக்கலால் தடைபட்டுப் போனவையே. அப்படி வெளியீட்டுக்காக பல வருடங்கள் விளக்கிற்குள் பூதமாய் காத்திருக்கும் படங்களின் பட்டியல் இதோ...

படித்துறை (2010)

படித்துறை

சுகா இயக்கத்தில் ஆர்யாவின் தயாரிப்பில் உருவான படம் `படித்துறை'.

காதல் 2 கல்யாணம் (2010)

காதல் 2 கல்யாணம்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, திவ்யா ஸ்பந்தனா நடித்த படம் `காதல் 2 கல்யாணம்'

ரெண்டாவது படம் (2013)

ரெண்டாவது படம்

தமிழ்ப்படம் வெளியாகி ஹிட்டான பிறகு அமுதன் இரண்டாவதாக இயக்கிய படம் `ரெண்டாவது படம்'. விமல், விஜயலட்சுமி, அரவிந்த் ஆகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வா டீல் (2014)

வா டீல்

அருண் விஜய், கார்த்திகா நடிப்பில் ரத்தின சிவா இயக்கிய படம் `வா டீல்'. இந்தப் படம் வெளியாகாமல் போக, அதன் பின் விஜய்சேதுபதி நடித்த `றெக்க', ஜீவா நடிப்பில் `சீறு' ஆகிய படங்களை இயக்கினார் ரத்தின சிவா.

இடம் பொருள் ஏவல் (2014)

இடம் பொருள் ஏவல்

`கூடல்நகர்', `தென்மேற்கு பருவக்காற்று', `நீர்ப்பறவை' ஆகிய படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிய படம் `இடம் பொருள் ஏவல்'. விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

அப்பாவின் மீசை (2015)

அப்பாவின் மீசை

நடிகை ரோகிணி இயக்குநராக களம் இறங்கிய படம் `அப்பாவின் மீசை'. சேரன், நித்யா மேனன், நாசர், பசுபதி உட்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ரா ரா ரா ராஜசேகர் (2015), யார் இவர்கள் (2018)

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான படம் `ரா ரா ரா ராஜசேகர்'. இந்த படம் வெளியாகாத நிலையில், அடுத்ததாய் `யார் இவர்கள்' என புதுமுகங்கள் நடிப்பில் ஒரு படத்தை துவங்கினார் பாலாஜி சக்திவேல். அதுவும் இன்றுவரை வெளியாகாமல் உள்ளது.

சிப்பாய் (2016)

சிப்பாய்

சிலம்பாட்டம் சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடித்த படம் `சிப்பாய்'.

கிரகணம் (2017)

கிரகணம்

`பியார் பிரேமா காதல்', `ஸ்டார்' படங்களின் இயக்குநர் இளன் இயக்கிய முதல் படம் `கிரகணம்'. கிருஷ்ணா, சந்திரன் நடித்திருந்த இந்தப் படம் 2017 ஜூலை 28 வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.

இறவாக்காலம் (2017)

இறவாக்காலம்

மாயா படத்தின் வெற்றிக்குப் பின் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான படம் `இறவாக்காலம்'. எஸ் ஜே சூர்யா, ஷிவதா, வாமிகா நடித்த படம்.

சர்வர் சுந்தரம்  (2017)

சர்வர் சுந்தரம்

சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கி இயக்கிய படம் `சர்வர் சுந்தரம்'. ஒரு சமையல் கலைஞர் பற்றிய படமாக உருவானது.

மன்னவன் வந்தானடி (2017)

மன்னவன் வந்தானடி

`இரண்டாம் உலகம்' பட ரிசல்ட்டுக்குப் பிறகு யாருமே எதிர்பாராத விதமாக அமைந்த கூட்டணி செல்வராகவன் - சந்தானம். 2017ல் இவர்கள் துவங்கிய படம் `மன்னவன் வந்தானடி'. இப்போது நெட்ஃப்ளிசில் `ஹெர்' சீரிஸ் மற்றும் கவின் படத்தின் `ஸ்டார்' படம் மூலம் பிரபலமான அதிதி போஹங்கர் தான் இப்படத்தில் ஹீரோயின்.

அடங்காதே  (2017)

அடங்காதே

சண்முகம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த படம் `அடங்காதே'.

ஒத்தைக்கு ஒத்த (2018)

ஒத்தைக்கு ஒத்த

பர்னேஷ் இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா நடித்த படம் `ஒத்தைக்கு ஒத்த'.

ஓடி ஓடி உழைக்கனும் (2018)

`கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துக்கு பிறகு மணிகண்டன் - சந்தானம் கூட்டணியில் உருவான படம் `ஓடி ஓடி உழைக்கணும்'.

அலாவுதீனின் அற்புத கேமரா (2019), அக்னி சிறகுகள் (2020)

`மூடர் கூடம்' படத்திற்கு பிறகு நவீன் இயக்கி நடித்த படம் `அலாவுதீனின் அற்புத கேமரா'. 2019 ஏப்ரல் 19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் வெளியாகவில்லை. இதன் பிறகு அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் நடிப்பில் `அக்னி சிறகுகள்' படத்தை இயக்கினார். அப்படமும் வெளியாகவில்லை.

டைட்டானிக் காதலும் கவுந்து போகும் (2018)

டைட்டானிக் காதலும் கவுந்து போகும்

ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், கயல் ஆனந்தி நடித்த படம் `டைட்டானிக் காதலும் கவுந்து போகும்'

நரகாசூரன் (2018)

நரகாசூரன்

துருவங்கள் பதினாறு படத்திற்கு பின் கார்த்திக் நரேன் இயக்கிய படம் `நரகாசூரன்'. அர்விந்த் சுவாமி, ஸ்ரேயா, இந்திரஜித் எனப் பலரும் நடித்திருந்தனர்.

சதுரங்க வேட்டை 2 (2018)

சதுரங்க வேட்டை 2

சதுரங்க வேட்டை 2சதுரங்க வேட்டை பட வெற்றிக்குப் பின் அதன் இரண்டாம் பாகம் ஹெச் வினோத் கதை எழுத, அர்விந்த் சுவாமி, த்ரிஷா நடிப்பில் நிர்மல் குமார் இயக்கி உருவானது.

பார்ட்டி (2018)

பார்ட்டி

வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், ஜெயராம், சத்யராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன் நடித்த படம் `பார்ட்டி'.

ஏஞ்சல் (2019)

ஏஞ்சல்

கே எஸ் அதியமான் இயக்கத்தில் உதயநிதி, பாயல் ராஜ்புத் நடித்த படம் `ஏஞ்சல்'.

அதோ அந்த பறவை போல (2019)

அதோ அந்த பறவை போல

வினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் `அதோ அந்த பறவை போல'

பாரீஸ் பாரீஸ் (2019)

பாரீஸ் பாரீஸ்

இந்தியில் வெளியான குயின் படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் ரீமேக் ஆனது. அதன் தமிழ் ரீமேக் தான் இந்த பாரீஸ் பாரீஸ். ரமேஷ் அரவிந்த் இயக்க, காஜல் அகர்வால் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி இதன் எந்த மொழி ரீமேக்கும் இன்னும் வெளியாகவில்லை.

ஆயிரம் ஜென்மங்கள் (2019)

ஆயிரம் ஜென்மங்கள்

எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்த படம் `ஆயிரம் ஜென்மங்கள்'

யங் மங் சங் (2019)

யங் மங் சங்

அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா, ஆர் ஜே பாலாஜி, லட்சுமி மேனன் நடித்த படம் `யங் மங் சங்'

சுமோ (2020)

சுமோ

ஹோமிசின் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த் நடித்த படம் `சுமோ'

வணங்காமுடி (2020)

வணங்காமுடி

செல்வா இயக்கத்தில் அர்விந்த் சுவாமி, ரித்திகா சிங் நடித்த படம் `வணங்காமுடி'

காக்கி (2020)

காக்கி

செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, இந்துஜா நடித்த படம் `காக்கி'.

கா (2020)

கா

நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த படம் `கா'.

ஆலம்பனா (2021)

ஆலம்பனா

பாரி விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் `ஆலம்பனா'.

பிசாசு 2 (2022)

பிசாசு 2

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் `பிசாசு 2'. 2025 மார்ச் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், அதன் பின்னணியில் சில சிக்கல்கள் நீடித்தே வருகிறது. அது தீர்ந்து வெளியாகுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மோகன்தாஸ் (2022)

மோகன்தாஸ்

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் `மோகன்தாஸ்'.

காதலை தேடி நித்யானந்தா | 4G | இடிமுழக்கம்

சீனுராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்த படம் `இடிமுழக்கம்'. இது போக படப்பிடிப்பு முடியாத நிலையில் இரு ஜிவி படங்கள் இருக்கின்றன. அருண் பிரசாத் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்த படம் `4ஜி'. படப்பிடிப்பு நடந்து பின்பு நின்று போனது. மேலும் அப்பட இயக்குநர் விபத்து ஒன்றில் 2020ல் இறந்துவிட்டார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி வி நடித்த `காதலை தேடி நித்யானந்தா' படமும் பாதி படப்பிடிப்போடு நிற்கிறது.

மனுஷி (2023)

மனுஷி

கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த படம் `மனுஷி'. 

துருவ நட்சத்திரம் (2023)

துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் `துருவ நட்சத்திரம்'.

இது போல இன்னும் வெளிவராத படங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் எந்தெந்த படங்கள் எப்போது வெளிவரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.!